fbpx

Jeevanulla Devan | ஜீவனுள்ள தேவன்

Loading

ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்
எனக்கு என்ன கவலை
ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்
எனக்கு ஏது கவலை
இல்லை கவலை எனக்கு இல்லை கவலை
ஏது கவலை எனக்கு ஏது கவலை

அஞ்சாதே முதலும் முடிவும் நான் என்றதால்
எனக்கு ஏன் கவலை – 2
ஆபத்து காலத்தில் தப்புவிப்பேன் என்றதால்
பயமே எனக்கு இல்லை

வாக்கு மாறா வல்லவர் என்னோடிருப்பதால்
எனக்கு ஏன் கவலை – 2
சர்வ வல்லவரின் நிழலில் நான் உள்ளதால்
பயமே எனக்கு இல்லை

வாதை உன் கூடாரத்தை அணுகாது என்றதால்
எனக்கு ஏன் கவலை – 2
வழிகள் எல்லாம் என்னைக் காக்க தூதர்கள்
உள்ளதால் கலக்கம் ஏதுமில்லை

நித்தம் என்னை நடத்துவேன் என்று நீர் சொன்னதால்
எனக்கு ஏன் கவலை – 2
என் கிருபை போதும் என்ற வாக்கு இருப்பதால்
பயமே எனக்கு இல்லை

என்னை விசுவாசி அற்புதங்கள் காண்பாய் என்றதால்
எனக்கு ஏன் கவலை – 2
பரிசுத்தமாய் வாழ்ந்து பலர் பரத்துக்கு வரணுமே
அதுதான் எந்தன் கவலை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS