To Advertise Contact - christmusicindia@gmail.com

Jeevanulla Devane | ஜீவனுள்ள தேவனே

Loading

ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவா பாதையிலே நடத்தும்
ஜீவா தண்ணீர் ஊரும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்

இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்

பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ

ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்

வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS