To Advertise Contact - christmusicindia@gmail.com

Jeevath Thanneerae | ஜீவத் தண்ணீரே

Loading

ஜீவத் தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே

வாரும் ஐயா போதகரே
வற்றாத நதியாக வாரும் போதகரே

கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே
மிதந்து  மிதந்து  மகிழணுமே

போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும்  இடமெல்லாம் பரிசுத்தமே
சேருமிடமெல்லாம்  ஆறுதலே
செல்லுமிடமெல்லாம்  செழிப்புத்தானே

கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும்
பாடி பாடி மீன் பிடிக்கணும்
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்

கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தரவேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகள் எல்லாம் உணவாகணும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS