Jeyam Kodukkum Devanukku | ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கொடி கொடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

நீதியின் கரத்தினால்
தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன்
எதற்குமே அஞ்சிடேன் – ஜெயம்

அற்புதம் செய்பவர்
அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர்
மீட்பர் ஜெயிக்கிறார் – ஜெயம்

நம்பிக்கை தேவனே
நன்மைகள் அளிப்பார்
வார்த்தையை அனுப்பியே
மகிமைப் படுத்துவார் – ஜெயம்

உண்மை தேவனே
உருக்கம் நிறைந்தவர்
என்னை காப்பார்
உறங்குவதில்லையே – ஜெயம்