To Advertise Contact - christmusicindia@gmail.com

Kaakkum Karangal | காக்கும் கரங்கள்

Loading

காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை

நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன் – நம்பிவா

கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் என்னை கரம்பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போலே எழும்பிடுவாய் – நம்பிவா

அத்திமரம் துளிர் விடாமல்
ஆட்டுமந்தை முதலற்றாலும்
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை – நம்பிவா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS