To Advertise Contact - christmusicindia@gmail.com

Kaalaiyil Devanaith Thediduvom | காலையில் தேவனைத் தேடிடுவோம்

Loading

காலையில் தேவனைத் தேடிடுவோம்
வேளையிதே அவர் வெளிப்படுவார்
தேவனைத் தேடிடும் நேரமிதே
தேடித் பரன்முகம் கண்டடைவோம்

அதிகாலையில் எழுந்திடுவோம்
துதிபலியவர்க்கே செலுத்திடுவோம்
புதுபல கிருபைகள் அடைந்திடவே
புகழ்ந்தவர் நாமத்தை போற்றிடுவோம் – காலையில்

ஆத்ம நேசரை தேடிடுவோம்
ஆவலுடன் ஆதி காலையிலே
ஆயத்தமாகியே காத்திருப்பேன்
ஆண்டவர் என் ஜெபம் கேட்டிடுவார் – காலையில்

கண்மணிபோல் சென்ற இராவினிலே
கண்ணுறங்காமலே காத்தனரே
இன்னும் வரும் பகல் முழுவதிலும்
இன்னல்கள் நீக்கியே காத்திடுவார் – காலையில்

கன்மலையும் எந்தன் மீட்பரும் நீர்
என் நினைவும் எந்தன் வார்த்தைகளும்
உம் சமூகம் பிரீதியாயிருக்க
உன்னதமா பெலன் தந்திடுவீர் – காலையில்

உந்தன் வருகையை எண்ணியே நான்
எந்த வேளையிலும் ஆயத்தமாய்
இந்த புவிதினம் வாழ்ந்திடவே
சொந்த என் இராஜ்ஜியம் நாடுகிறேன் – காலையில்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS