To Advertise Contact - christmusicindia@gmail.com

Kaangindra Devan | காண்கின்ற தேவன்

Loading

காண்கின்ற தேவன் நம் தேவன்
காலமும் அவரைத் துதித்திடுவோம்
அல்லேலூயா – அல்லேலூயா – (2)

தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
தரணியில் எவரேனும் உண்டோ
கர்த்தர் இயேசு காண்கின்றார்
கருத்தாய் அவரை தேடிடுவோம்

ஆவியிலே நொறுக்கப்பட்டு
ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
அன்பு இதயம் காண்கின்றார்
அனுகிடுவோம் நாம் கண்ணீரோடு

உத்தம இதயம் கொண்டிருப்போம்
உன்னத வல்லமை பெற்றிடுவோம்
கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்
கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன

ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து
அவரது கிருபைக்கு காத்திருந்தால்
பஞ்ச காலத்தில் உணவளிக்க
பரிவாய் நம்மைப் பார்க்கின்றார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS