Kalangaathae Maganae | கலங்காதே மகனே

கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கன்மலையாம் கிறிஸ்து
கைவிடவே மாட்டார் – 3

மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மனதுருகும் தேவன்
மாறிடவே மாட்டார் – 3

உலகம் வெறுத்து பேசலாம்
காரணமின்றி நகைக்கலாம்
உன்னை படைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்துவார்

தீமை உன்னை அணுகாது
துன்பம் உறைவிடம் நெருங்காது
செல்லும் இடமெல்லாம்
தூதர்கள் காத்திடுவார்

வியாதி வறுமை நெருக்கலாம்
சோதனை துன்பம் சூழலாம்
உன்னை மீட்டவரோ
உன்னைக் காத்துக் கொள்வார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS