Kalangaathae Manamae | கலங்காதே மனமே

கலங்காதே மனமே திகையாதே நம்
கர்த்தர் உன்னை என்றும் கைவிடாரே
இம்மட்டும் நடத்திய இம்மானுவேலன்
இன்னமும் நம்மை நடத்திடுவாரே

செங்கடல் வரினும் பயந்து விடாதே
சேனைகள் தொடரும் மலைத்து விடாதே
யேகோவா நிசியே இயேசுவே வருவார்
என்றுமே ஜெயமாய் நடத்திடுவாரே

வானத்தின் மன்னா அனுதினம் தந்து
கானக வழியில் நடத்திச் சென்றாரே
கழுகினைப் போலத் தன சிறகினில் சுமந்து
கடைசி வரை நம்மை நடத்திடுவாரே

கன்மலைத் திறந்தேத் தாகத்தைத் தீர்த்து
காடைகள் அளித்தே வாஞ்சைகள் நிறைத்தார்
கசந்திடும் மாரா மதுரமாய் மாற்றி
களிப்புடனே நம்மை நடத்திடுவாரே

யேகோவா தேவன் எபெனேசராக
இம்மட்டும் உதவி நமக்களித்தாரே
யேகோவாயீரே என்னும் பெயராலே
நமக்காக யாவையும் செய்திடுவாரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS