கல்வாரி குருசண்டை ஏங்கி நின்றேன்
திரு இரத்தம் புரண்டோடி பெரு வெள்ளமாய்
என் மீது பாய்ந்திட நான் சுத்தமாயினேன்
என் பாவம் நீங்கினதே
சரணங்கள்
மண் வாழ்வில் இன்பங்கள் வெறுத்துமே
வீண் வாழ்வின் நன்மைகள் நாம் பெற்றிட
உன்னத ஜீவனை என்னில் நீர் ஈந்ததால்
உம்மை என்றும் துதிப்பேன்
என்றும் உம்மை துதிப்பேன்
உம் சித்தம் செய்து நான் ஜீவித்திட
உம் பெலனாம் என்னை தேற்றிடுமே
ஆத்தும பாரம் நான் பெற்றென்றும் உமக்காய்
ஊழியம் செய்திடவே
தேவா அருள் செய்குவீர்
உன்னத ஆவியை என்னில் ஊற்றும்
இன்னிலம் தன்னில் நான் பிராகசிக்க
கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
உம் கரம் பற்றிடுவேன்
உம் வழி நான் நடப்பேன்
சிலுவைக் காட்சியைக் கண்டிடுவேன்
அதை எண்ணி தினமும் வாழ்ந்திடுவேன்
சாந்த சொரூபியாம் ஏசுவின் சிலுவையில்
சாய்ந்திடுவேன் நானும்
ஏசுவை என்றும் விடேன்
என்னையே முற்றிலும் உம் கரத்தில்
ஜீவ பலியாக படைக்கிறேன்
மன்னவா விண்மீது நீர் வரும் வேளையில்
ஏழையான் காணப்பட
நீர் என்னைக் காத்துக் கொள்வீர்