To Advertise Contact - christmusicindia@gmail.com

Kalvaariyae Kalvaariyae | கல்வாரியே கல்வாரியே

Loading

கல்வாரியே கல்வாரியே
ஒப்பற்ற கல்வாரியே
கல்மனம் மாற்றிடும்
கனிவுள்ள கல்வாரியே – கல்

தேவனின் நித்ய அன்பு
இயேசுவில் தொனிக்கின்றதே – 2
வேதனையின் இரத்தம்
தாரையா சிந்துது மானிடனே உனக்காய் – 2 – கல்வாரியே

காயங்கள் ஐந்ததுவும் ஐந்து
கண்டதை இரட்சிக்கவே – 2
நாயகனை நம்பி ஜீவனுக்குள் செல்ல
தீயனைத் தள்ளிவிடு – 2 – கல்வாரியே

பாவத்தை மட்டுமல்ல – உன்
நோயையும் நீக்கிடுமே – 2
பயத்தை நீக்கி , விசுவாசம் கொண்டு
பட்சமாய் அவரண்டைவா – 2 – கல்வாரியே

சாத்தானின் தலையையும்
சிலுவையில் நசுக்கினார் – 2
சகலத்தையும் ஜெயித்தவர்
சீக்கிரம் வருகிறார் – 2 – கல்வாரியே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS