கண் கலங்காமல் காத்தீரய்யா
கால் இடறாமல் பிடித்தீரய்யா
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன்
உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
எடுத்துக் கொண்டீரய்யா
பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது
மகிமையின் கிரீடம் என் தலைமேல்
நோவா நடந்ததால் உம் கண்களில்
கிருபை கிடைத்ததையா
குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி
வெள்ளதிலிருந்து காத்தீரய்யா
ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
சிநேகிதன் என்றழைத்தீர்
செய்யப்போவதை மறைப்பேனோ என்று
தெரிவித்தீர் உமது திட்டங்களை
உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
விண்ணப்பம் கேட்டீரையா
கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்
நறுமணம் வீசும் காணிக்கையாய்
பலியாகி அன்பு கூர்ந்தீர்
அது போல நானும் அர்பணித்தேன்
அன்பிலே நடந்து வளர்ந்திடுவேன்
ஒளியாம் உம்மோடு நான் நடந்தால்
பிறர் அன்பில் நான் வளர்வேன்
உம் இரத்தம் சகல பாவங்கள் நீக்கி
துய்மை படுத்தும் நிச்சயமே