Kannokkip Paarum Devaa | கண்ணோக்கிப் பாரும் தேவா

கண்ணோக்கிப் பாரும் தேவா என்னை
கண்ணோக்கிப் பாரும் தேவா என்னை – இயேசு தேவா

அனுபல்லவி
ஒத்தாசை அனுப்பும் பர்வதமே
கண்ணோக்கிப் பாரும் தேவா – இயேசு தேவா

அசுத்த ஆவியை எடுத்தீரே
பரிசுத்த ஆவியை கொடுத்தீரே
கர்த்தாதி கர்த்தாவே அப்பா பிதாவே
உம் நாமம் எந்தன் கெம்பீரமே

பயமுள்ள ஆவியை எடுத்தீரே
பலமுள்ள ஆவியை கொடுத்தீரே
தேவாதி தேவனே அப்பா பிதாவே
உம் பாதம் எந்தன் தஞ்சமே

உலகத்தின் ஆவியை எடுத்தீரே
உன்னத ஆவியை கொடுத்தீரே
இராஜாதி இராஜனே அப்பா பிதாவே
உம் கிருபை என்றும் போதுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS