To Advertise Contact - christmusicindia@gmail.com

Karangal Thatti Karththarai | கரங்கள் தட்டி கர்த்தரை

Loading

கரங்கள் தட்டி கர்த்தரை பாடுங்கள் – அல்லேலூயா
ஆண்டவரை பாடுங்கள் ஆனந்தமாய் பாடுங்கள்

வானம்பூமி உண்டாக்கின அவரை பாடுங்கள் – நம்மை
வானலோகம் சேர்ப்பவரை வாழ்த்தி பாடுங்கள்

செங்கடலை பிரித்தவரை சேர்ந்து பாடுங்கள் – தினம்
செம்மையான இதயத்தோடு அவரை பாடுங்கள்

எரிகோ மதில் உடைத்தவரை எழுந்து பாடுங்கள்
எண்ணிலாத நன்மை செய்த இவரை பாடுங்கள்

தாயை போல காப்பவரை துதித்து பாடுங்கள் – நம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை தினமும் பாடுங்கள்

மரித்தெழுந்த மகிபனையே மகிழ்ந்து பாடுங்கள்- நமக்காக
பரிந்து பேசும் பரனை புகழ்ந்து பாடுங்கள்

காலை மதியம் மாலையிலும் அவரை பாடுங்கள் – நடு
இரவினிலே விழித்து எழுந்து ஜெபித்து பாடுங்கள்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS