Karththaavae Ummai Potrugiren | கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
உம்மை கூப்பிட்டேன்
என்னை குணமாக்கினீர்

எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
என் கவலைகள் பெருகும் போது
உம் கரங்கள் அணைக்குதையா – கர்த்தாவே

உந்தன் தயவால் மலைபோல் நிற்கச் செய்தீர்
உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கி போனேன்
சாக்கு ஆடை நீக்கி, என்னை
சந்தோஷத்தால் மூடினீர்

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்
பெலத்தால் இடைக் கட்டினீர்
மான் கால்கள் போலாக்கினீர்

உம் (உந்தன்) திரு பாதத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
உம் திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்
கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே

உமது கோபம் ஒரே ஒரு நிமிடம் தான்
உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும்
மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS