Karththane Em Thunaiyaaneer | கர்த்தனே எம் துணையானீர்

கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்

எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
மனுமக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர்

பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
ராஜா, உம் அன்பு எனைக் கண்டது
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை

சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா உமைப்போல் நான் எங்கும் கண்டதில்லை

ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே, உமைப்பாடக் கூடுமோ? (2)
ஜீவனை உமக்களிக்கின்றேனே
உமைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS