To Advertise Contact - christmusicindia@gmail.com

Karththar Enthan Meippar | கர்த்தர் எந்தன் மேய்ப்பர்

Loading

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
எனக்கொன்றும் குறைவில்லை
பத்திரமாய் எனைக்காப்பார்
அவரின்றி ஒருவரில்லை

பசுமை நிறைந்த புல்லில் நிதம் என்னைப் போஷித்து
அமர்ந்த நீரூற்றண்டை அவர் என்னைச் சேர்ப்பித்து
சேதமின்றி ஆத்துமத்தை
நித்தியமான நீதியின் பாதையில் என்றும் நடத்திடுவார்

சாவின் கோர சேதம் நான் கண்டு அஞ்சேனே
தேவன் வல்ல பாதம் என்றென்றும் தஞ்சமே
ஜீவபரன் என்னோடிருப்பார்
அவர்தம் கோலும் அவர்தம் தடியும் என்னைத் தேற்றும்

பகைவர் முன்னே என்னை அவர் மேன்மைப்படுத்தி
நிகரில்லாத தைலம் பூசி என்னை உயர்த்தி
சாகும் வரை நன்மை தொடர
எசுதேவன் வீட்டில் நெடுநாள் நிலைத்திருப்பேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS