Karththar Mel Baaraththai | கர்த்தர் மேல் பாரத்தை

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்

நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்

நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்

தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்

கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்?

வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்

என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS