கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்
எந்நாளும் நினைத்திடுவோம்
நன்றியாலே நிறைந்தவர் நாமம்
எந்நாளும் துதித்திடுவோம்
அன்றொரு நாளில் அழைத்தவர் அவரே
இன்று வரையிலும் நடத்தி வந்தாரே
சென்ற இடமெல்லாம் நம்முடன் இருந்தே
ஜெயமுடன் நம்மையும் நடத்தினாரே
ஞானிகள் வல்லவர் நல்லோர்கள் இருந்தும்
ஏதுமில்லா நம்மைத் தெரிந்தெடுத்தாரே
நம்மையும் நம்பியே கிருபைகள் அளித்தார்
என்றுமே அவர்க்காய் வாழ்ந்திடுவோம்
எத்தனை குறைகள் நம்மிலே இருந்தும்
எத்தனை முறையோ மன்னித்து மறந்தே
நம் பெலவீனத்தில் தம் பெலனளித்தே
நம்மையும் தயவாய் நடத்தினாரே
எத்தனை நன்மைகள் எத்தனை நண்பர்கள்
எத்தனை மேன்மைகள் நமக்களித்தாரே
எண்ணிடும் வேளையில் கண்ணீர் பெருகுதே
எண்ணில்லா துதியும் ஏறெடுப்போம்