To Advertise Contact - christmusicindia@gmail.com

Karththar Un Veettai | கர்த்தர் உன் வீட்டை

Loading

கர்த்தர் உன் வீட்டை கட்டாராகில்
அதை காட்டும் உந்தன் பாடு விருதா
கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில்
உன் கண் விழிப்பும் விருதா

பல்லவி
ஆதலால் என் உள்ளமே சதா அவர் சமூகம்
நிதம் நேசரையே துதிதிடட்டும்
கர்த்தருக்கு பயந்து அவர் வழி நடந்தால்
நீ பாக்கியம் கண்டடைவாய்

உன் வழிகளெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடராத படி
தங்கள் கரங்களில் எந்திடுவார் – ஆதலால்

இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நீ பயப்படவே மாட்டாய் – ஆதலால்

சிங்கத்தின் மேலும் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்து காத்திடுவார் – ஆதலால்

ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்துமா நேசரவர் – ஆதலால்

கர்த்தருக்குப் பயப்பட்டவன்
இவ்வித ஆசீர்வாதமும் பெறுவான்
கர்த்தர் சீயோனில் இருந்து உன்னை
கடைசி மட்டும் ஆசீர்வதிப்பார் – ஆதலால்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS