பல்லவி
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்
சரணங்கள்
கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமாவும்
களித்து மேன்மை பாராட்டிடுதே
ஒரு மித்தே நாம் உயர்த்திடுவோமே
கருத்தாய் அவர் நாமமே – கர்த்தரை
தூய பரன் முகம் நோக்கிடுவார்
சூரிய சோபையாய் மாறிடுவார்
ருசிக்க இன்பமே இயேசுவின் அன்பே
சுகிக்க நல்லவரே – கர்த்தரை
ஜீவனை யீந்தார் தம் சாவினாலே
வேதனை நீக்கினார் நோவினாலே
அற்புதமாம் எந்தன் ஜீவியமதையே
தற்பரன் மாற்றுகிறார் – கர்த்தரை
தேற்றி அப்போஸ்தல தூதுகளால்
மாற்றிடுவார் அவர் ரூபமதாய்
ஊற்றிடுவார் புது ஜீவன் எந்நாளும்
ஏற்றுவார் ஜெயக் கொடியே – கர்த்தரை
அக்கினி ஊடே நடந்திடினும்
விக்கின மின்றியே நான் துலங்க
ஆக்குவார் பொன்னினும் என் விசுவாசம்
மிக்கதோர் மகிமையதாய் – கர்த்தரை
சீயோனே உன் பெலன் தரித்திடுவாய்
வீற்றிடுவாய் எழுந்தெருசலேமே
உன்துயர் நீக்கிடும் இன்ப மணாளன்
வந்திடும் வேளையிலே – கர்த்தரை