Karththarai Nambinor | கர்த்தரை நம்பினோர்

கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
சீயோன் மலைபோல் உறுதியுடன்
அசையாமல் இருப்பார்கள்  – 2

எருசலேம் நகரம் மலைகளால்
எப்போதும் சூழ்ந்து இருப்பது போல்
இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை
சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார்

வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு
கனிதரும் மரமாய் வளர்வார்கள்
கோடை காலத்தில் பயமில்லை
வறட்சி வந்தாலும் கவலையில்லை

மனைவி கனிதரும் திராட்சைச் செடி
பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்
இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்
இடைவிடாமல் ஜெபிப்பார்கள்

கர்த்தரை நேசித்து அவர் வழியில்
நாடாகும் மனிதர் பேறுபெற்றோர்
உழைப்பின் பயனை உண்பார்கள்
நன்மையும் நலமும் பெறுவார்கள்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS