Karththarai Nambiyae Jeevippom | கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்

ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனை கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் – கர்த்தரை

உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய் காத்திடுவார் – கர்த்தரை

உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் – கர்த்தரை

அன்பு மிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரை தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார் – கர்த்தரை

நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசீர் வந்திறங்குமே
கிருபை, நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே – கர்த்தரை

இம்மைக்கேற்ற இன்பங்களை
நம்மைவிட்டு முற்றும் அகற்றுவோம்
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை இராஜ்ஜியத்தில் – கர்த்தரை