Karththaraip Paadiye | கர்த்தரைப் பாடியே

கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை
கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
கரையில்லை அவரன்பு கரையற்றதே

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசுவை போல் வேறு நேசரில்லையே

கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே
பெலனும் இவ்வேளைக்கும் எளியோர்க்கும் திடனாய்
வெயிலுக்கு ஒதுங்கும் வின் நிழலுமானார் – இயேசு

போராட்டம் சோதனை நிந்தை அவமானம்
கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
தேவ குமாரனின் விசுவாசத்தாலே நான்
ஜீவித்து சேவிக்க திடமளித்தார் – இயேசு

கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வறுத்த
எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்
வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார் – இயேசு

சீயோனில் சிறப்புடன் சேர்த்திட இயேசு
சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே
முகமுகமாகவே காண்போமே அவரை
யுகயுகமாகவே வாழ்ந்திடுவோம் – இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS