Karththaraith Thuthiththu | கர்த்தரைத் துதித்து

கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை
பிரஸ்தாபமாக்குங்கள் (2)
அவரின் செய்கைகளை என்றும்
பிரசித்தப்படுத்துங்கள்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா பாடிடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்

கர்த்தரே பெரியவர்
அவர் ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர் (2)
ஜனங்களுக்குள்ளே மகிமையைப்பாடி (2)
விவரித்துச் சொல்லுங்களேன் (2) – கர்த்தரைத்

கர்த்தர் வல்லவர்
செங்கடல்தனை பிளந்தவர் (2)
அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் (2)
வல்லமை மிகுந்தவர் (2) – கர்த்தரைத்

கர்த்தரே நல்லவர்
நன்மையானதைச் செய்பவர் (2)
அல்லேலூயா பாடி ஆனந்தமாய்க் கூடி (2)
மகிமை செலுத்துவோம் (2) – கர்த்தரைத்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS