Karththaraiyae Nambidum | கர்த்தரையே நம்பிடும்

கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே
கலங்காதே ஒருபோதும் வெட்கமடைவதில்லை

சரணங்கள்
செங்கடல் கோரமாய் முன்னே நிற்கும்
சேனைகள் பின்னால் தொடர்ந்து வரும்
ஆனாலும் முன்னேரிப்போ என்கிறாரே
அவரே ஓர் வழி திறந்திடுவாரே…….. …..

கானானின் குடிகள் கொடியவரே
கானக பாதை கடினமாமே
கடந்து போய் நாம் அதை சுதந்தரிப்போமே
கர்த்தரே நமக்காய் யுத்தம் செய்வாரே …..

பாகாலின் சீடர்கள் சவால் விட்டு
பதிலளியா தேவனை வேண்டுகிறார்
எலியாவின் தேவன் இறங்கி வந்தாரே
எரி நெருப்பால் இன்றும் பதிலளிப்பாரே

உனக்கெதிராக ஆக்கிடுமாயுதம்
ஒருக்காலும் வாய்க்காமல் மறைந்திடுமே
உன் மேல் ஓர் யுத்தம் எழும்பினாலும்
உன்னை இரட்சிக்கும் தேவன் உண்டு …..

யாக்கோபின் கூட்டமே பயப்படாதே
ஈசாக்கின் தேவன் உன் துணையே
அன்னை தன் சேயை மறந்தாலுமே
ஆண்டவர் இயேசு அரவணைப்பாரே…..

சீயோனே உந்தன் பாடுகளெல்லாம்
சிலகாலம் என்று நினைத்தே பாடு
சீக்கிரம் வருவார் சேர்த்திட உன்னை
பாக்கிய மடைவாய் பரலோக வாழ்வில் …

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS