To Advertise Contact - christmusicindia@gmail.com

Karththarukku Naam Puthuppaattu | கர்த்தருக்கு நாம் புதுப்பாட்டு

Loading

கர்த்தருக்கு நாம் புதுப்பாட்டு
துதியுடன் ஏறெடுப்போம்
ஆவிக்குள்ளாய் பாடி மகிழ்வோம்
இயேசுவைக் கொண்டாடிடுவோம்

பல்லவி
நாமெல்லாரும் ஒன்று கூடி
இயேசுவை கொண்டாடிவோம்

அனுபல்லவி
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கர்த்தருக்கென்றும் ஸ்தோத்திரம் – அல்லேலூயா (8)

பரமானந்த நற்செய்தி வானில்
பரலோக தூதர் கூறினர்
நம் இயேசு பிறந்தார் பெத்லகேமில்
நமக்கும் இரட்சிப்பு வந்ததே – அல்லேலூயா (8)

பரன் இயேசுவின் சத்திய மார்க்கம்
புனித புது வழியே
மெய்பூரண சத்தியம் பறை சாற்றி
மகிமை ஊழியம் செய்குவோம் – அல்லேலூயா (8)

இன்ப இயேசுவே வாரும் விரைந்தே
இது நம் இறுதி ஜெபமே
நம் இயேசுவின் பொன் முகம் வேகம் காண்போம்
நடு வானில் வந்திறங்குவார் – அல்லேலூயா (8)

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS