Kasanthamaaraa Mathuramaagum | கசந்தமாரா மதுரமாகும்

கசந்தமாரா மதுரமாகும்
வசந்தமாக வாழ்க்கை மாறும்
கண்ணீரோடு விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய்

இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே நீ காண்பதில்லை
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை, தூங்கவில்லை

தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார்
வெள்ளம் போன்ற சத்துரு வந்தால்
ஆவியால் கோடி ஏற்றிடுவார் – இன்று

வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார்
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை நிறுத்திடுவார் – இன்று

சோர்ந்து போன மகனே உனக்கு
சத்துவத்தை அளித்திடுவார்
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார் – இன்று

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS