To Advertise Contact - christmusicindia@gmail.com

Katruth Thandhu | கற்றுத் தந்து

Loading

கற்றுத் தந்து நடத்துகின்றீர்
கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்
ஆவியானவரே தூய ஆவியானவரே

என்றென்றைக்கும் எங்களுடன்
எப்போதும்கூட இருக்கின்றீர்
சத்திய ஆவியானவரே
சாட்சியாய் வாழச் செய்பவரே

போதிக்கின்றீர் சாத்தியங்களை
நினைவூட்டுகின்றீர் வசனங்களை
அனைத்தையும் சொல்லித் தருகின்ற
ஆலோசகர் நீர்தானய்யா

தேவனுக்குகந்த பலியாக
அர்ப்பண வாழ்வு நான் வாழ
மகிமைமேல் மகிமை தருகின்றீர்
மறுருபமாக்கி மகிழ்கின்றீர்

ஊழியம் செய்ய பிரித்தெடுத்து
உலகமெங்கும் தூது அனுப்புகிறீர்
நற்செய்தி அருளும் நாயகரே
உற்சாகப்படுத்தும் உன்னதரே

முழு உம்மை நோக்கி நடத்துகிறீர்
வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்
தினம் தினம் தேற்றும் துணையாளரே
எனையாண்டு நடத்தும் மணவாளரே

உலகம் உம்மை அறிவதில்லை
பெற்றுக் கொள்ள முடிவதில்லை
எங்களுக்கு நீர் ஜீவிக்கின்றீர்
இதயத் துடிப்பாய் இயங்குகின்றீர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS