To Advertise Contact - christmusicindia@gmail.com

Kattip Pidiththaen | கட்டிப் பிடித்தேன்

Loading

கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழ வேண்டுமே

இரங்கும் ஐயா மனம் இரங்குமையா

துப்பாக்கி ஏந்தும் கைகள் – உம்
வேதம் ஏந்த வேண்டும்
தப்பாமல் உம் விருப்பம்
எப்போதும் செய்ய வேண்டும்

பழிக்கு பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்
மன்னிக்கும் மனப்பான்மை
தேசத்தில் மலர வேண்டும்

பிரிந்த குடும்பமெல்லாம்
மறுபடி இணைய வேண்டும்
பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
களிப்பாய் மாற வேண்டும்

வீடு இழந்தவர்கள்
இடங்கள் பெயர்ந்தவர்கள்
மறுவாழ்வு பெற வேண்டும்
மகிழ்ச்சியால்  நிரம்ப வேண்டும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS