Kirubai Emmai | கிருபை எம்மை

Loading

கிருபை! எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபை
கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை

சரணங்கள்
யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்
இயேசுவின் பெலம் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை

தேசமே பயப்படாதே எங்கள்
தேவன் கிரியை செய்கிறார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை

கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்
காரியம் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்
காத்திருந்தே அடைவோம் – கிருபை

ஆண்டுகள் நன்மையினால் – முடி
சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார் – கிருபை

ஜாதி ஜனங்களையும் – வந்து
மோதி அசைந்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளமகிழும்
கர்த்தரே வந்திடுவார் – கிருபை

உண்மையும் நேர்மையுமாய் – இந்த
ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம் – கிருபை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS