To Advertise Contact - christmusicindia@gmail.com

Kirubai Irakkam | கிருபை இரக்கம்

Loading

கிருபை இரக்கம் நிறைந்தவோர்
கிருபாசனம் ஆ தோன்றிடுதே
தருணமேதும் எங்கிலும் நல்ல
சகாயம் பெற்றிட ஏற்றதுவே

பல்லவி
கிருபையே பெருகுதே
கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
என்ன என் பாக்கியமிதே

சரணங்கள்
நம்மைப் போலவே சோதிக்கப் பட்டும்
நாதனோர் பாவமுமற்றவராய்
நாளும் நம் குறைகள் கண்டுருகும்
நல்ல ஆசாரியர் நமக்குண்டே

நம் பெலவீனத்தில் அவர் பெலன்
நல்கிடுவார் பரிபூரணமாய்
நாடுவோமே மாறா கிருபையை
நமக்காயே யவர் ஜீவிப்பதால்

வானங்களின் வழியாய்ப் பரத்தில்
தானே சென்று இயேசுவா மெமது
மா பிரதான ஆசாரியரைப்
பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை

பிதாவண்டை சேரும் சுத்தர் கட்காய்
சதாபரிந்து பேசியே நிற்போர்
இதோ எம்மையே முற்றுமுடிய
இரட்சிக்க வல்லமையுள்ளவரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS