To Advertise Contact - christmusicindia@gmail.com

Githiyoan Nee | கிதியோன் நீ

Loading

கிதியோன் நீ கிதியோன் நீ
தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பபட்டவன் நீ

வாலிபனே வாலிபனே
ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா

உணவுக்குப் போராடும் தேசத்திலே
உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே – வாலிபனே
விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை
விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி

தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே
விக்கிரக ஆவிகளை விரட்டணுமே
கர்த்தர் மனம் இறங்க கதறணுமே
நாடு நலம் பெற ஜெபிக்கணுமே

சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு
பயம் இன்றி திருவசனம் அறிக்கையிடு
மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடு
புளியாத அப்பமாக மாறிவிடு

இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுப்போ
எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்டாய்
படைத்தவர் உனக்குள்ளே இருப்பதால்
பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS