To Advertise Contact - christmusicindia@gmail.com

Kodaa Koodi Sthoththiram Paadi | கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி

Loading

கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே

அனுபல்லவி
சேற்றிலிருந்து தூக்கியெடுத்துத்
தேற்றியனைத்துக் காத்துக் கொண்டாரே – தேவசுதன்

பாவியை மீட்கப் பரண் சித்தம் கொண்டார்
பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்
பரமனிவ் வழியைத் தேடி வந்தாரே
பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ பூவுலகில்

தேவனின் சித்தம் செய்யும் படியாய்
தாசனின் கோலம் தா மெடுத்தணிந்து
தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்
தம்மை பலியாய் தத்தம் செய்தாரே எந்தனுக்காய்

ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
கேடுவராது காக்கும் நல் மேய்ப்பர்
இன்று மென் மேலே வைத்த நேசத்தால்
என்றன்றும் நன்றி கூறித் துதிப்பேன் இறையவனை

தாவீது கோத்திரச் சிங்கமாய் வந்து
சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டீரே
தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே
தங்கியிருப்பேன் சீயோன் மலையில் நித்தியமாய்

குயவனின் கையில் களிமண்ணைப் போல
குருவே நீர் என்னை உருவாக்குமையா
மாசற்ற மனவாட்டயாய் என்னைக்
காத்துக் கொள்ளும்படி கருணைகூர் ஐயா ஏழை என்னை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS