To Advertise Contact - christmusicindia@gmail.com

Kodaakodi Sthoththiram | கோடாகோடி ஸ்தோத்திரம்

Loading

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

பரிசுத்த வான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம் – கோடாகோடி

கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலூயா அல்லேலூயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே – கோடாகோடி

குருவி பறவை வானம் பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலூயா அல்லேலூயா
அற்புதமான சிருஷ்டிகரே
எந்த விசுவாசம் கற்றறிந்தோம் – கோடாகோடி

கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலூயா அல்லேலூயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர் – கோடாகோடி

கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
தூயமுகம் கண்டு கெம்பீரிப்போம் – கோடாகோடி

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS