To Advertise Contact - christmusicindia@gmail.com

Kuyavane Kuyavane | குயவனே குயவனே

Loading

குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்க செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே – குயவனே

விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம கிருபையால்
உகந்த தாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே – குயவனே

மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே – குயவனே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS