Leviyare Aasaariyare | லேவியரே ஆசாரியரே

Loading

பல்லவி
லேவியரே ஆசாரியரே ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே

அனுபல்லவி
இயேசுவின் பாதத்தில் பரவசமாய்
பாரத மீட்புக்காய் கிருபை பெறுவோம் – லேவியரே

எட்டுத் திசைக்கும் யேசு புகழ் பரவ
நித்திய சுவிசேஷம் ஏந்திச் செல்லுவோம்
சாத்தானின் கட்டுகளை அறுத்திடுவோம்
சத்திய சபை கட்டி எழுப்பிடுவோம் – லேவியரே

விசுவாச வீரர்களாய் எழுபிடுவோம்
வெளிப்பாடு வரங்களை உபயோகிப்போம்
பாதாளக் கட்டுகளை அறுத்திடுவோம்
பரலோக பலன்களை சேர்த்துக்குவிப்போம் – லேவியரே

நம்பிக்கை நங்கூரமாய் நடந்திடுவோம்
தாழ்மையின் ரூபங்களால் வளர்ந்திடுவோம்
பாவத்தின் கட்டுகளை அறுத்திடுவோம்
காரிய சமர்த்தர்களாய் நின்றிடுவோம் – லேவியரே

ஜெபத்தின் ஜெயந்களால் முன் செல்லுவோம்
தியான ஊற்றுகளில் தூது பெறுவோம்
மாமிசத்தின் கட்டுகளை அறுத்திடுவோம்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் கர்த்தரைக் காண்போம் – லேவியரே

பேச்சின் தூதர்களாய் பறந்திடுவோம்
நடக்கையின் நகல்களாய் விரைந்திடுவோம்
சமூதாயக் கட்டுகளை அறுத்திடுவோம்
நன்மையின் வாசல்களாய் விழித்திடுவோம் – லேவியரே

இயேசுவின் காயங்களின் கனிகளே நாம்
களிகூர்ந்து மகிழ்ந்து ஆடிப்பாடுவோம்
அப்போஸ்தல ஊழியத்தில் ஆர்ப்பரிப்போம்
ஆசீர்வாத மழைக்கு மேகங்களாவோம் – லேவியரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS