To Advertise Contact - christmusicindia@gmail.com

Aaseervaatha Mazhai Pozhiyum | ஆசீர்வாத மழை பொழியும்

Loading

ஆசீர்வாத மழை பொழியும் தேவா
ஆசீர்வாத மழை பொழியும் தேவா
எங்களையும் ஜனங்களையும் ஆசீர்வதியும் தேவா – ஆசீர்வாத

கீழாகாமல் மேலாவாய் என்று சொன்னீர்
வாலாகாமல் தலையாவாய் என்று உரைத்தீர் (2)
ஆசீர்வாத ஊற்று திறக்கட்டுமே
ஆசீர்வாத மழை என்மேல் பொழியட்டுமே (2) – ஆசீர்வாத

ஆசீர்வாத வாழ்வு உந்தன் வாக்குத்தத்தம்
ஆபிரகாமின் ஆசீர் எங்கள் சுதந்திரம் (2)
ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை மாற்றும்
நேசக்கரம் தொட்டு என்னை ஆசீர்வதியும் (2) – ஆசீர்வாத

யாபேசின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம்
ஆசீர்வதியும் எங்கள் நல்ல கர்த்தரே (2)
பாவிகளுக்கும் துரோகிகளுக்கும்
நன்மை செய்பவர் என்னை ஆசீர்வதியும் (2) – ஆசீர்வாத

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS