To Advertise Contact - christmusicindia@gmail.com

Aathiyum | ஆதியும்

Loading

ஆதியும் அந்தமுமானவரே
அதிசயமானவரே

சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே
ஜீவனின் அதிபதியானவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
நிலைவரமானவரே

ஒரு மனதோடு தேடுவோரை
உண்மையாய் ஏற்றுக் கொள்பவரே
ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை
உடனடி அளிப்பவரே

தாகமுள்ளோர்க்கு ஜீவ நீரை
தாராளமாயீவேன் என்றவரே
ஆவியாம் ஜீவ தண்ணீரை எமக்கு
மேவியே இன்று ஈவீரே

பாவிக்கு பாதை காண்பிக்கவே
பாரினில் ஈவாய் தோன்றினீரே
பாதகன் போல பாரக் குருசில்
தேவனே தொங்கினீரே

சீக்கிரமாய் இதோ வருபவரே
மணவாட்டிசபையைச் சேர்த்திடவே
மாசற்றோராய் உம் மகிமையில் சேர
மன்னவனே அருள் ஈவாரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS