To Advertise Contact - christmusicindia@gmail.com

Alpaa Omegaa Aathiyum | அல்பா ஒமேகா ஆதியும்

Loading

அல்பா ஒமேகா ஆதியும் நீரே
நேசர் சத்தம் கேட்டேன்
அவரை இன்று பணிவேன்
அவர் சமூகம் எனக்குப் பேரின்பம் (2)

இயேசு நிற்கிறார் அமர்ந்த கடலிலே
அழைத்துச்செல்கிறார் அமைதி வாழ்விலே
லீபனோன் சிகரத்தில் ஓங்கி நிற்கும் விருட்சம் போல்
கிருபை நிறைந்த இடத்தில் நான்
செழித்து வளருவேன் – அல்பா

வாடை எழும்பிடும் தென்றல் வீசிடும்
ஜீவ தண்ணீரின் துறவு தோன்றிடும்
லீபனோன் சிகரத்தில் ஓடிவரும் வெள்ளம்போல்
வசனம் நிறைந்த இடத்தில் நான் கனிகள்
பெற்றிடுவேன் – அல்பா

நிழல் சாய்ந்திடும் பகல் குளிர்ந்திடும்
வெள்ளைப் போள வாசனை வந்து நிறைந்திடும்
லீபனோன் சிகரத்தில் சீறிவரும் சிங்கம்போல்
வீரம் நிறைந்த இடத்தில் நான்
ஜெயித்து வளருவேன் – அல்பா

லீலி புஷ்பமே கிச்சிலி மரம் இதோ
மதுரமானவர் மகிமை தருகிறார்
லீபனோன் சிகரத்தில் வீசிவரும் வாசனை
சாட்சி நிறைந்த இடத்தில் பெருகி படர்ந்திடும் – அல்பா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS