Appavin Thalattu | Bernard David – Lyrics

இரவுகள் நீளமாக தோன்றுதோ
பகலை காண நீ துடிக்கிறாயோ
மறந்திட முடியாமல் தவிக்கிறதோ-உன் உள்ளம்
நாளையை குறித்து உனக்கு கவலையோ

பயந்திடாதே அப்பா இருக்கிறேன்
இந்த யுத்தம் என்னுடையது
கலங்கிடாதே அப்பா இருக்கிறேன்
என் மார்பிலே நீ சாய்ந்திடு-2

நீ தானே என் ஆசையே
செல்லம் நீ தானே
நீ தானே என் ஏக்கமே
நினைவெல்லாம் நீ தானே

காத்திருந்தும் கானல் நீரை காண்கிறாயோ
பறந்திட முடியாமல் திகைக்கிறாயோ
யாரும் இல்லை என்று கலங்கிடுதோ-உன் நெஞ்சம்
உலகம் உன்னை எதிர்த்து நிற்கிறதோ

பயந்திடாதே அப்பா இருக்கிறேன்
இந்த யுத்தம் என்னுடையது
கலங்கிடாதே அப்பா இருக்கிறேன்
என் மார்பிலே நீ சாய்ந்திடு-2

நீ தானே என் ஆசையே
செல்லம் நீ தானே
நீ தானே என் ஏக்கமே
நினைவெல்லாம் நீ தானே-2

ஆரிராரோ அப்பா இருக்கிறேன்
என் மார்பிலே நீ சாய்ந்திடு-2

Leave a Reply

Close Menu
error: Content is protected !!