To Advertise Contact - christmusicindia@gmail.com

Deva Janame Paadi | தேவ ஜனமே பாடி

Loading

தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ தேவனை போற்றுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரில் களித்திடுவோம்

சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
காத்த தேவனை துதித்திடுவோம்
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவ தேவனை துதித்திடுவோம் – தேவ

வானம் பூமி ஆளும் தேவன்
வாக்கை என்றுமே காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனைத் துதித்திடுவோம் – தேவ

கர்த்தர் நாமம் ஓங்கி படர
தேவ மகிமை விளங்கிடவே
தேவ சுதராம் சேவை செய்து
தேவ ராஜனை வாழ்த்திடுவோம் – தேவ

தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி என்றுமே ஆதரித்தார்
மறந்திடாமல் உறங்கிடாமல்
நினைத்த தேவனை துதித்திடுவோம் – தேவ

நமது போரை தாமே முடித்து
ஜெயமே என்றும் அளித்திடுவார்
சேனை அதிபன் நமது தேவன்
அவரை என்றும் போற்றிடுவோம் – தேவ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS