Deva Sabaiyil Devan | தேவ சபையில் தேவன்

Loading

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரண் இயேசு உலாவுகிறார்

பயத்தோடு நல பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் – தேவ

ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்தியா கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே – தேவ

இராப்பகலாய் தன் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் – தேவ

உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர் – தேவ

சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே – தேவ

ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜெ ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம் – தேவ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS