To Advertise Contact - christmusicindia@gmail.com

Devan Aruliya | தேவன் அருளிய

Loading

தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்காக ஸ்தோத்திரம்
தேவன் நல்கிய நன்மைகள் யாவுக்கும்
என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்

மரண வாசலிலிருந்து என்னைத்
தூக்கினார் ஸ்தோத்திரம்
பாவத்தினின்று விடுதலை ஈந்த
இயேசுவுக்கே ஸ்தோத்திரம்

வாக்குத்தத்தங்களை வாக்கு மாறாது
நிறை வேற்றினார் ஸ்தோத்திரம்
என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்ட
தேவனுக்கே ஸ்தோத்திரம்

கிருபையை அதிகமாய் விளங்கச்
செய்தவருக்கு ஸ்தோத்திரம்
கிருபையை என்னை விட்டு விலக்கா
தேவனுக்கே ஸ்தோத்திரம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS