En Meetparae | என் மீட்பரே

Loading

என் மீட்பரே என் இரட்சகா
என் தேவனே என் கேடகம்
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே

துதிகளின் பாத்திரனே
திருசித்தம் போல் நடத்தி
துர்ச்சன ப்ராவாகத்தில்
தேற்றினீர் – போற்றுவேனே
சதிமோச நாசங்களில்
சத்துருவின் பயன்களிலும்
சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே
சரணம் சரணம் மேசியாவே – என் மீட்பர்

தினம் தினம் உம் அருளால்
தீமைகள் வெல்லுவேன் நான்
கன மகிமை யாவும் உமக்கே செலுத்துவேனே
உம்மாலே ஒருவனாக சேனைக்குள் பாய்ந்திடுவேன்
வாழ் நாளெல்லாம் நீர் என் தஞ்சம்
வழி நடத்தும் மேசியாவே – என் மீட்பர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS