En Siththamalla | என் சித்தமல்ல

Loading

என் சித்தமல்ல உம் சித்தம் நாதா (2)
என்னாலேயல்ல உம்மாலே ஆகும் (2)

அடிமை நானே எஜமான் நீரே நாதா (2)
பெலவீனன் நானே பெலவான் நீரே நாதா (2) – என்

காலையில் தோன்றி மாலையில் மறைபவன் நாதா (2)
மலர்போல் பூத்து நிழல்போல் மறைபவன் நாதா (2) – என்

களிமண் நானே குயவன் நீரே நாதா (2)
மண்ணான மனிதன் நான் மண்ணுக்கு திரும்புவேன் (2) – என்

பாதகன் என்மேல் பாசம் கொண்டீர் நாதா (2)
பாரெல்லாம் உம்புகழ் பாடி மகிழ்வேன் நாதா (2) – என்

உம் திரு இரத்தத்தால் மீட்டுக் கொண்டீரே நாதா (2)
உம் செல்ல பிள்ளையாய் சொந்தமானேன் நாதா (2) – என்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS