To Advertise Contact - christmusicindia@gmail.com

Ennai Maravaa Iyaesu | என்னை மறவா இயேசு

Loading

என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

சரணங்கள்
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அருந்துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே – என்னை

பயப்படாதே வலக்கரத்தாலே
பாது காப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவரு மென்னை – என்னை

தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
வல்லவா எந்தன் புகலிடமே – என்னை

திக்கற்றோராய் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலைமுடியும் எண்ணினீரே – என்னை

உன்னைத் தொடுவோன் என் கண்மணியை
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே – என்னை

உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக் கொடியே – என்னை

என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடுமே – என்னை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS