Enthak Kaalaththilum | எந்தக் காலத்திலும்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

ஆதியும் நீரே – அந்தமும் நீரே
ஜோதியும் நீரே – என் சொந்தமும் நீரே – எந்தக்

தாய் தந்தை நீரே – தாதியும் நீரே
தாபரம் நீரே – என் தாரகம் நீரே – எந்தக்

வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
வாதையில் நீரே – என் பாதையில் நீரே – எந்தக்

வானிலும் நீரே – பூவிலும் நீரே
ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே – எந்தக்

துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் – மாறாதவர் நீரே – எந்தக்

தேவனும் நீரே – என் ஜீவனும் நீரே
ராஜராஜனாம் – என் சர்வமும் நீரே – எந்தக்

Close Menu
error: Content is protected !!