Enthan Iyesu Vallavar | எந்தன் இயேசு வல்லவர்

Loading

எந்தன் இயேசு வல்லவர்
என்றும் நடத்துவார்
ஆ பேரின்பம் அவர் என் தஞ்சமே
அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன்

சரணம்
அற்புதமாம் அவர் அன்பு
அண்டினோர் காக்கும் தூய அன்பு
இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு
மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன் – எந்தன்

சர்வ வல்ல தேவனிவர்
சாந்தமும் தாழ்மை உள்ளவராம்
எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம்
நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை – எந்தன்

குற்றங்களை மன்னித்தவர்
தம்மண்டை என்னைச் சேர்த்துக் கொண்டார்
எந்தன் நேசர் ஒப்பற்றவர் – பொறுமை நிறைந்தவர்
சார்ந்திடுவேன் இந்நிலத்தே – எந்தன் தஞ்சமிவர் – எந்தன்

கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார்
சீரான பாதை நடத்திடுவார்
எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்
எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின் செல்லுவேன் – எந்தன்

ஜெயங் கொண்ட வேந்தனிவர்
பாதாளம் யாவும் வென்றவராம்
வெற்றியுடன் முன்சென்றிட கிருபை நல்கிடுவார்
முன்செல்லுவேன் இயேசுவுடன் என்றும் ஆனந்தமே – எந்தன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS