Iraajaavaay Iyesu | இராஜாவாய் இயேசு

Loading

இராஜாவாய் இயேசு தூதர்கள் சூழ
மேகமிதில் தோன்றும் நாள்
வேகமாய் நெருங்கி வந்திடுதே – நாம்
ஏகமாய் எழும்புவோம்

பல்லவி
பரிசுத்தமாக்கப்பட்டோரே ஒன்றாய்
பறந்து வந்திடுவீர்
பாவமில்லாமலே காத்திடும் நமக்காய்
பரன் இயேசு வந்திடுவார்

கர்த்தருக்குள்ளே நித்திரையானோர்
காகளம் தொனிக்கவே
கண்ணிமைப் பொழுதில் கல்லறையில் நின்று
வல்லமையாய் வருவார் – பரிசுத்தமாக்கப்பட்டோரே

காயங்கள் கண்டு ஆனந்தத்தாலே
கண்ணீர் சொரிந்திடுவோம்
காலா காலங்களாய் கல்வாரி நேசத்தை
கருத்தாய்ப் பாடிடுவோம் – பரிசுத்தமாக்கப்பட்டோரே

ஜீவ கிரீடம் சூடிடுவோம்
ஜீவனை ஊற்றியே நாம்
தேவ சித்தமே செய்தோர் பெறவே
ஜெயவேந்தனாய் வருவார் – பரிசுத்தமாக்கப்பட்டோரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS